Thursday, 27 August 2015

ரவிச் சந்திர யோகம்

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் '                 622
                அறிவில்லாதவனை ஒவ்வொரு சிக்கலும்
அதிர்ச்சிக்குள்ளாக்கிச் சிறிது சிறிதாய் சிதைத்து விடும். ஆனால் அறிவு உள்ளவனை அதிர்ச்சிக் குள்ளாக்கும் சிக்கல் உலகில் இல்லவே இல்லை.
 
              ஒவ்வொரு ஜாதகத்திலும் குறைந்த பட்சம் இரண்டு,மூன்று வகையான யோகமாவது அமைந்திருக்கும்.யோகமில்லாத ஜாதகமே இல்லை எனலாம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைக்கு எற்ப்ப செயல்படும்.
              சூரியனும்,சந்திரனும் பரஸ்பர கேந்திர திரிகோணம்,உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் ரவிச்சந்திர யோகம்.
        சூரியனுக்கோ,சந்திரனுக்கோ 1-3-4-5-9-6-10-11 ல் கிரகங்கள் இருந்தாலும் ரவிச்சந்தி யோகமகும்.
  சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனி ருக்க பிறந்தவர்கள் செல்வம்,சாஸ்திரம்,புத்தி  ஜோதிடம் மாந்திரிகம்,எதையும் எளிதில் கிரகிக்கும் திரமையுள்ளவர்கள் காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
       சூரியனுக்கு பணபார ஸ்தானமாகி 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால் சுமரன பலன் கிடைக்கும். செல்வம்,சாஸ்திர ஞானம்,புத்தி,சாமர்த்தியம்,நல்ல குணம் அமைந்திருக்கும்.
                சூரியனுக்கு1-4-7-10ல் சந்திரன் இருந்தால் ஒரளவுக்கு நன்மை தரும். இவர்கள் அறிவாற்றலைப் பெறுவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
        பகல்/இரவு ஜெனனம்பார்க்க வேண்டும். செவ்வாய்,சுக்கிரன் பார்வை சூரியனுக்கே(அ) சந்திரனுக்கே இருந்தால் யோகம் சிறப்பு பெறும்.

பகலவன் தனக்கு மூன்று ஆறோன்பான்  
                                         பண்ணிரண்டினில் மதியமர
மிகு தனம் புத்தி வினைய நல் ஞானமேவு பல
                                                                           காரியயூகி
சகலரும் மதியும் பணபர இருக்க வியம்பிய யோகம்
                                                                                       ஆதிகம்
தகைபெறு கேந்திரந்தனில் மதியிருக்க சாற்றிய
                                                                            பலனிலையம்
   சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள்.செல்வம்,சாஸ்திரம், புத்தி காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
      சூரியனுக்கு பணபரஸ்தானத்தில் 2-5-8-11-ல் சந்திரனிருக்க யோகம் சிறப்பு பெறும்.
         சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரனிருந்தால்
எந்தவிதமன பலனையும் தாரது.

நிலவுக்கு கதிரவன் கோணம் - மாதே
நீ நிலத்தில் தனஞ் சுகவானாமில்லோன்
அலகை வணதுர்க்கை வசியன் - சென்மன்
அந்தகன் அழைப்பானாம் தெட்டாண்டில் - சங்கர
     சந்திரனுக்கு 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் சுகம் எதையும் அனுபவிக்க முடியாது.வனதோவதை துர்க்கையை வசியம் செய்வான் 68 வயதுவரை ஆயுள் உள்ளவார்கள்.
           ஆனால் சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால்
சிறப்பன யோகம் தரும்.

பாரப்பா பகலவனுக்கு அஞ்சு எட்டு
       பாக்கியத்தில் சுபர் நிற்க அதனுள்ளோர்கள்
சீரப்பா திரிகோண கேந்திரமேற
       சிவ சிவா பிதுர்க்கு தனமும்
வீரப்பா விதியுண்டு வெள்ளி புந்தி
          வீடானால் அமடில்லை ராஜ யோகம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
           கொற்றவனே புலிப்பாணி கூறினேனே
   சூரியனுக்கு5-8-9-ல் சுபர்கள் நிற்க அந்த ராசிக்கு அதிபதிகள் கோணம்,கேந்திரத்தில் இருந்தால் ஜாதகனின் தந்தைக்கு சிறப்பன யோகத்தை தரும்.
செல்வம்,ஆயுள்,பூகழ்,உண்டாகும்.
       5-8-9- வீடுகள் புதன் சுக்கிரன் வீடாக அமைந்தால்  ஜாதகருக்கு சிறப்பன ராஜ யோகம் அனுபவிப்பர்கள்.
    பகலில் பிறந்த ஜாதகருக்கு நவாம்சத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்து கட்டாயம். குருவால் பார்கப்பட வேண்டும்.
       இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனை சுக்கிரன்
பார்க்க வேண்டும்.பலம் பெற்று இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும்.
     இருவரில் ஒரு பலம் பெறுவது அவசியம்.

ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment