Thursday 21 July 2016

சுகர் நாடியில் அரசியல் யோகம்

இராவியயும்புதனுஞ்சுகத்திலேயிருக்க
       விந்துவுஞ்சனியும்பத்திடத்தே
இருக்கிலக்கினத்திற்குனுறக்குருவங்
      கிசத்திலேசுக்கிரனிருக்கச்
சிரமிசையரசனிருக்கமாமதியஞ்
     சிறந்துபூரணவடிவடையத்
தீயர்சட்டாட்டவியத்திலேமறையச்
      செழித்துலகுதித்தசாதகவான்
அரசனாயுகமடிதொழப்பலநா
      ளாயுளோடிருந்துநாமகளும்
அலைகடல்மகளுந்தனதிடம்வாழ
      வன்னசத்திரம்பலநடத்தி
வரைபுரைதிருத்தோளிடைப்பிரதாப
     மாமகநண்டஞ்செயக்கனக
மணிமுடிசூடியரியணைமேவி
   மகத்துவம்பொருந்திவாழ்வானே   428
        சூரியனும்,புதனும் நாலில் இருக்க, வளர் பிறைச் சந்திரனும்,சனியும் கூடி பத்தில் இருக்க, லக்கினத்தில் செவ்வாய் இருக்க , குருவுக்கு 1-5-7-ல் சுக்கிரன் இருக்கவும் , பாவர்கள் 6-8-12-ல் இருக்கப் பெற்றவர்கள் .உலக பூகழ்  பெற்ற அரசனாக நீண்ட ஆயுளோடு தனம் தர்மஞ் செய்து மகத்துவம் பொருந்தி வாழ்வர்கள் .

தலையிறைநான்கினிறைநிதிறையித்
     தலைவர்கண்மூவரும்பாக்யத்
தலத்திலேநிலைத்துத்தசத்திறைதலைமேற்
       சரித்துநல்லேனார்களெல்லோரும்
மறையிலேகருணைத்திருக்கணோக்
கேற்றி
       மற்றவரற்றவராகி
வாய்ந்திடக்கண்டசாதகன்புவிக்கு
      மன்னவனேயென்பர்வல்லோர்
நிலையிறைவாபத்திறைநிதியிறையிந்
     நிருபர்ஊகண்மூவரும்பத்தி
னிற்கவத்தசத்தோனிலக்கினத்தலத்தே
     நேருறத்தீயவர்நோக்கந்
தொலைவுறநல்லோர்கரூணையாரமுதந்
      தோய்ந்துறக்கிடைத்தசாதகவான்
சுடர்முடிசூடியரியணையேறுந்
       துரகதகெசரததுரையே      429
       லக்கினாதிபதியும் ,4-ஆம் அதிபதியும் ,   9-ஆம் அதிபதியும்,மூவரும் கூடி 9-ல் இருக்க,10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க சுபர்கள் பார்க்கப்பட்டால் ஜாதகர் இப்பூமிக்கு அரசனாவார்கள்.
         லக்கினாதிபதியும்,9-ஆம் அதிபதியும், 11-ஆம் அதிபதியும் மூவரும் 10-ல் இருக்க , 10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க , இவரை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருக்க பிறந்த ஜாதகர் நவரத்தினம் பதித்த சிம்மாசனத்தில் அர்ந்து இப்பூமி முழுதும் அரசாள்வான்.

பண்ணவர்சாமிதானவர்சாமி
      பாக்கியசாமியிம்மூவர்
பரவறுகோணகேந்த்ரமாளிகையிற்
      பதிவுறவவ்வர்க்கவையே
திண்ணமாமாட்சியுச்சங்களாகச்
      சிறந்திடத்தீயவர்பார்வை
திகைக்கப்பாலொழியநல்லவர்கரணை
      செழித்திடக்கிடைத்தசாதகவான்
வண்ணமாமகுடஞ்சூடியிராச
       மாளிகையரியணைமேவி
மதகெசதுரகரதபதாதிகள்சூல
     வாழ்விடைத்தாழ்விலாதிருந்து
தெண்ணிலாவனையசத்ரசாமரபூ
       சிதையுறீஇவதைபுரியாது
செந்தனிப்பெருங்கோல்செலுத்துவா
னென்று
       செப்புவரொப்புவர்தீர்ந்தோர்     430

குருவும்,சுக்கிரனும்,9-ஆம் அதிபதியும் முவரும் தனித்தனியாக கேந்திர, கோணங்களில் ஆட்சி உச்சமாக இருக்க இவர்களை பாவர்கள் பார்கமால் இருக்க பெற்ற ஜாதகர் ரத்தின மகுடம் சூடி சிம்மாசனத்தில் அர்ந்து அரசள்வார்கள்

No comments:

Post a Comment