Sunday, 6 November 2016

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம் !!

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம்

       சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .
          சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும் .திரு.காமராஜா் அவா்களுக்கு கன்னியில் ராகு அதற்கு 5-ல் மகரத்தில் சனி பெருந்தலைவா் ஆனாா்.
  சனிக்கு 2-ல் சந்திரனும்,சனிக்கு 3-ல் குருவும் அதாவது சனி சந்திரன் குரு  வாிசையாகவே அல்லது மறிமறி வாிசையாக இருந்தால் சிறப்பன ராஜயேகம் அமையும்.திரு காமராஜா் அவா்களின் ஜாதகத்தில் மகரத்தில் சனி,கும்பத்தில் சந்திரன்,மீனத்தில் குரு அமைந்து ராஜயோகத்தை தந்தது .
      சந்திரனுக்கு 1-4-7-10-ல் குரு,ராகு கூடியிருந்தால் யோகத்தை அளிக்கும் முரசயோகம் .
      சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .
       சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த புகழ் பெற்ற அரச யோகம் .
       சந்திரனுக்கு 10-ல் ராகு இருந்தால் ராஜயோகம் தரும் .
     சந்திரனுக்கு 6-7-8-ல் புதன் சுக்கிரன் இருந்தால் ராஜயோகம் .
       லக்கினாதிபதி நின்ற ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திாிகேணங்களில் இருந்தால் ராஜயோகம் .
     ராகுவுக்கு 3-ல் குரு ,11-ல் சுக்கிரன் இருந்தால் அரசயோகம்.    
      சூாியனுக்கு 7-ல் சுக்கிரன் இருந்து லக்கினத்திற்கு 7-ல் சுபா் இருந்தால் யோகமுள்ள மனைவி அமைவாள்.
       சூாியனுக்கு 3-6-9-12-ல் சந்திரன் இருந்தால் வாிஷ்டயோகம் ஞானம், வித்தை,செல்வம்,புகழ்,சுகம் கிட்டும் .
      சூாியனுக்கு முன் குரு இருந்தால் வித்வன் ,கவிஞா் அமையும்.
           சூாியனுக்கு பின் செவ்வாய் இருந்தால் பராக்கிரமசாலியாவன்.  
   சனிக்கு 6-7-8-ல் சுபா்கள் இருந்தால் ஆயுள் அதிகம் .
செவ்வாய்க்கு 2-ல் அல்லது 12-ல் புதன் இருந்தால் நாலாவிதமன வித்தையுள்ளவா் பல சாஸ்திரங்கள் அறிந்தவா்கள்.
   கடக லக்கினத்தில் சந்திரன் இருக்க சப்தமஸ்தானமான மகரத்தில் செவ்வாய் இருந்தால் ராஜயோகம் .
       லக்கினாதிபதி சந்திரனுக்கு 5-ல் அல்லது 10-ல் இருந்தால் ராஜயோகம் .
   சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் நின்றால் பொருள் கிட்டும் ,கன்று காலிகள் ,வாகனம் கிட்டும் .
     
     
   
  

Wednesday, 19 October 2016

சுக யோக வாழ்வு

சுக - யோக - வாழ்வு 


ஒல்வது அறிவது அறிந்து அதன் கண்தங்கி
செல்வார்க்குச் செல்லாதது இல்
    எந்த ஒரு செயலில் இறங்கினாலும் முதலில் தன்னால் அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கமுடியும்.என்ற அளவைத் தொிந்து கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயம் செய்து சாதனை செய்தால் சுக போக வாழ்வு அமையும் .
   மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சுக வாழ்வு,வசதிவாய்புகள் வசிக்கும் வீடு,பூமி லாபம்,வாகனம், கல்வி,தொழில் இவைகள் நாமது திறமை தகுதிக்கு ஏற்ப அமையும் . அதை அறிவது எப்படி என்பதை ஆராய்வோம் .
            சுகம் தரும் பாவம் நான்காம் பாவமகும் ஒருவருடைய வாழ்வில் பெறும் சுகம் அனைத்தையும் குறிக்கும்.
தாயினால் பெறும் சுகம் ,
ஆடையால் பெறும் சுகம் ,
கல்வியால் பெறும் சுகம்,  வீடு,பூமியால் பெறும் சுகம,
கால் நடைகலால் பெறும் சுகம்,
விவசாயத்தால பெறும் சுகம்,
வாகனத்தால் பெறும் சுகம்,
உறவால் பெறும் சுகம், உதவியாளர்களால் பெறும் சுகம், வசதி வாய்ப்புகளால் பெறும் சுகங்களை அறியலாம்.
   ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீடு,வீட்டின் அதிபதியின் பலத்திற்கு ஏற்ப அனைத்து அமையும்.யாருக்கு சுக வாழ்வு அமைபும் என்பதை ஆராய்வோம் .
நான்கம் வீட்டின் காரக கிரகங்கள்
நான்காம் வீடும் சந்திரனும் தாய்,தாய் நலம்,தாயால் பெறும் வசதி வாய்ப்பு
நான்காம் வீடும் செவ்வாயும் சொத்துகளையும் ,பூமி லாபம்.
நான்காம் வீடும் புதனும் கல்வி,வசதி வாய்புகள்,நண்பர்கள்.
நான்கம் வீடும் சுக்கிரனும் வாகம், அலாங்கார வீடுகள் அறியலாம்.
தோன்றிய வியாழன் நாலாம்
                           தானமே சுகத்தை நல்கும்
வான்றிய மதியம் நாலாம் தானமும்
                                                 மாதா செய்கை
ஆன்றெழ சுங்னாலு மாகிலா சுகந்த
                                                              அஞ்சில்
போன்றிடு வாகனத்தைப் பூஷணம்
                                                        என்று பாரே
       குரு 4-ஆம் இடத்தைக கொண்டு ஜாதகனுக்கு வரும் சுகத்தைப் பற்றிக் கணக்கிட வேண்டும்.சந்திரன் 4-ஆம் இடம் தாயைப்பற்றி கணக்கிட வேண்டும்.சுக்கிரன் 4-ஆம் இடத்தைக் கொண்டு வாகனம் சுக வாழ்வையும் கணக்கிட வேண்டும்.
4-ல் நறுமணம் ,ஆபரணங்கள், வாகனம் போன்றவற்றைப் பற்றி கணக்கிடவேண்டும்.
கிாி நாலுக் குடையோனைப் பாரு
                                                                    - அவர் கிாி நாலில் திாிகோணம் கிாியிலேற
பெருங் கல்வி கன்று காலி-சென்மன்
பிரபலமாகவே வாழ்வாண்டி தோழி
                                                                  - சங்கர
            நான்காம் அதிபதியின் நிலை அறிந்து 4-ல் அல்லது 1-5-9-ல் இருந்தால் ஜாதகர்க்கு உயர் கல்வி , கன்று , மாடு,ஆடு,பூமி லாபம் கிட்டுமர்அடைவர்கள்.
பேசிடும் நாலாமாதி பெலத்திாி  
                                                கோண மேறில்
காசியத்திரையே போவான்          
                கணக்கனும் பார்வையுற்றால்
தேசமும் சுற்றி மன்னன்
                    திசையெட்டும் பேருமோங்க
வாசமாயிருக்கம் பூவில்
                 வணங்குவாாிவரைத்தனிலே
             நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் காசி யாத்திரை புனித யாத்திரைகள் செல்வர்கள். புதன் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி எட்டு திசைகளில் புகழ் அடைவர்கள் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
சுவாமி நித்தியானந்தர் ஜாதகத்தில் மீன லக்கினம் நான்காம் அதிபதி புதன் விருச்சிகத்தில் 9-ல் உள்ள
இவாின் இன்றைய நிலை அனைவருக்கும் தெறியும் .
சுக நிதி யோகனையும் ப
ஜொலிக்கும் திாி கோணம் கேந்திர
                                                                        மேற
அகம் பனை நிதி மிகவுண்டு-
                                                              சென்மன்
அவணியில் நற் போ் கொள்வன்  
                       ஆடச்சொன்னான்டி-சங்கர
4-9-ஆம் அதிபதிகளின் நிலைகளை ஆராய்ந்து 1-5-9-அல்லது 4-7-10-ல் இருந்தால் ஜாதகா்க்கு பொன், பொருள் செல்வங்கள் கிடைக்கும். உலக அளவில் பூகழ் அடைவன்.
தோன்றிய நாலில் நாதன்    
                                          சுபக்கிரகங்களாக
வான்றவன் அல்லால் இராசி
                தன்னையே அறிவால் நோக்க
ஊற்றிய விாழன் நல்ல உயிா்  
                                           பலனாகி வந்தால் வேன்றிடு பந்துக் கெல்லாம் இவன்
                                             எஜாமானாவான்
       நான்கம் இடத்தின் அதிபதி சுபக் கிரகங்களுடன் இருக்க அல்லது நான்காம் இடத்தை பார்த்தாலும்.
குரு பலம் பெற்றிருக்க ஜாதகா் மன்னவர்க்கு மன்னன சக்கரவா்த்தி யாகத்திகழ்வாா்கள்.
     நான்காம் அதிபதி ஆட்சி பெற்று லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சம்பந்த் பெற்று இருந்தால் சொந்த வீடு , வாகனம் ,நண்பா்களும் உதவுவா்கள்
நான்காம் இடத்திற்கு இருபுறபமும் சுபபா்கள் நின்றிருக்க அன்னைக்கு ஆயுள் அதிகம்.
   நான்கிற்குடையவனும் சுக்கிரனும் இணைந்து லக்கினத்திற்கு பத்தில் இருந்தால் வாகன சுகம் அடைவா்கள்
    நான்காம் அதிபதிபதியும் ,சுக்கிரன் கேந்திர,திகோணங்களில் பலமுடன் இருந்தால் ஜாதகா்கு நல்ல வீடு அமையும்.
      நான்காம் வீட்டிற்கு இருபுறமும் சுபா்கள் இருக்க,நான்காம் அதிபதி , குரு,சுக்கிரன் பலம் பெற்றிருப்பின் , கேந்திர,கோணங்களில் இருந்தால் அருமையான அழகன வீடுகள் அமையும் .
     குரு,சுக்கிரன் இணைந்து நான்கில் இருந்தால் ஜாதகா்,ஜாதகி புகழ் பெற்ற கவினாவா்கள.அழகன வீடுகள் .அரசு உயா் பதாவிகள் அமையும்.
     சந்திரனும் நான்காம் அதிபதியும் 1-4-7- 10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் பல வாகன யோகங்களையும்,செல்வாக்கும் ஏற்படும்.குருவின் பாா்வைக்கு ஏற்ப பலன் அமையும்.
    சுகஸ்தானாதிபதியான நான்காம் அதிபதி குருவுடன் 1-4-7-10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் ஜாதகா்/ஜாதகிக்கு சகலவிதமான சுக யோக/போகங்களையு

Thursday, 15 September 2016

திருமணம்

திருமணம்


திருமணம் என்பது திரு மாியதைக் கூரிய சொல் ,மணம் என்றால் கலத்தல் ,கூடுதல்,பொருத்துதல் என்று பொருள். ஆணும்,பெண்ணும் உடல்ரீதியாக உளரீதியாக இணைவுக்கு திருமணமாகும்.

   திருமணச் சடங்குகளின் காரண காாியங்களை நாம் சிலவற்றை அறிந்து கொள்வேம் .

தாலி : 

பொய்யும் வழுவு தோன்றிய பின்னர்
ஐயர்யாத்தனர் கரணம் என்ப
    பழங்கலத்தில் அணிகலங்கள் இல்லாதிருந்த போதும் ஒழக்கமுடன் இருந்த போது .
     தொல்காப்பியர்  கூற்றுப்படி பின்னாளில் மனித சமுதாயத்தை நெறிபடுத்த தாலி கட்டுதல் போன்ற சடங்குகளை மேற்கெண்டனர்.
   தாலம் என்பது பனையோலையைக் குறிக்கும் அந்தப் பனையோலையை ஒழுங்கு சய்து மஞ்சள் தடவி ,அதில் பிள்ளையர்  சுழியிட்டு இன்னார் மகளை ,இன்னாா்மகள் மணந்து கொண்டார்  வாழ்க ! என்றெழுதி ,அதை சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோா்த்து மணமகள் கழுத்தில் தாிப்பர் .தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் இதற்க்கு தாலி என்ற பெயா் வந்தது.நாகாரீகம் வளா்ந்தபிறகு பனை ஓலை தண்ணீர் பட்டு நைந்து போவதால் தாலியைத் தங்கத்தினால் செய்து அணிந்துக்கொண்டனர்
                   மனைவிக்கு கணவானே தெய்வமாதலின் கணவனாருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் ஆணிந்துகொண்டனர்.
       பெண்களுக்க திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிாினும் சிறந்தது.பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும் திருமாங்கல்யத்தை மட்டும் கழற்றக்கூடது திருணத்திலே மணகள் கையை மணகன் பற்ற வேண்டும்.அதற்குப் பாணிக்கிரகம் என்று பெயர்(பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியைப் பார்த்து அவள் திருமணமானவள் என்பதை ஆண்கள் தொிந்து கொள்வான்.)

முன்று முடிச்சு : மணமகள் கழுத்தில் மணமகன் மங்கல நான்பூட்டும்போது மூன்றுமடிச்சு இடுவார் இதன் தாத்பாியம் கணவன் மனைவி இருவரும் மனமொழிமெய் ஆகிய தாிகரணசுத்தியோடு இருக்க வேண்டும் என்பதாகும்.
பெண் தலைவகிடு எடுக்கும் போது நேர்வகிடுதான் அந்நாளில் எடுப்பார்கள் *துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதி * என்று திருமுருகாற்றுப்படை கூறுவது சமமாக இருபிாிவாகக் கூந்தலைப் பிாித்துச் சடை பின்னுவாரம் ,இதன் குறிப்பு கணவனுக்கு வரும் சுகதுக்கத்தில் சாிபாதி எற்றுக்கொள்வேன் என்பதாகும்..
மங்கல நாண் அணிவிக்கும் போது மணமகளை இடப்பாகத்தில் அமர்ரச் செய்துதிட வேண்டும் .அர்த்தநாதீஸ்வா் வடிவம் சக்திக்கு சிவபெருமான் இடப்பாகத்தை தாந்துள்ளார் லெட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களின் இடது பக்கத்தல் அவரவர் துணைவியார்கள் அமர்ந்திரப்பதைக் காணலாம் .

அட்சதை : திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள் . ஷதம் என்றால் குத்துவது என்று பொருள் அகரம் என்றால் அன்மைப்பொருளைத் தொிவிக்கிறது .அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்ற பொருள்.குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றால் உள்ளாது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து,முறையாக மஞ்சள்பொடி தூவி , பன்னீர் தெத்து அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவன்களை உண்டாகும் .

அம்மி மிதித்தல் : மணமக்கள் அக்னியை வலமாக வருகிற போது வடபுறத்திலே ஒரு கல் இருக்கும் , மணமக்களின் வலது பாதத்தை அந்தக்கல்லின் மீது வைக்குமாறு மனமகள் செய்வாள் ,அதன் பொருள் " இந்தக்கல்லைப்போல் உறுதியாக இரு "என்பதாகும் (அதிக பாரம் கல் தாங்கும் .)இன்பம்,துண்பங்களில் ஒரே மதிாியாக இருக்கவேண்டும் .

அருந்ததி பார்த்தல் : அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள் , அருந்ததி (அருந்ததி கணவனின் சொல்லுக்கு கட்டுப் பட்டாவள் கற்புடையவள் மனைமான்புடைய மகளி ரெல்லாம் தினமும் வணங்கும் பெருமை உடையவள் ) இன்னும் இவ்வுலகில் திருமணம் ஆனதும் கணவனாாின் கைத்தலத்தைப் பிடித்து மணவறையைச்சுற்றிவரும் சமயம் மணமகள் அருந்ததியை நினைத்து வாழ்த்தி வணங்குவது வழக்கம்.இச்சடங்குகள் அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல் என்று வழங்கப்படுகிறது.
      கற்பு நிலை குலைந்த அகலிகை கல்லாய் மண்ணில் இருந்தாள்,நிலைகுலையாத நட்சத்திரமாய் விண்ணில் உயர்ந்தாள்,ஆதலால் இழிவுக்கும் உயர்வுக்கும் உதாரணமாக ஒவ்வொரு மணமகளுக்கும் இவ்வுண்மை உணா்த்தப்படுகிறது .
     ( 2700 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றி வரும் இயல்புடைய மண்டலத்திற்கு சப்தாிஷி மண்டலத்தில் ) அதன் முற்பகுதியின் அடுயில் இருப்பது வஷிட்ட நட்சத்திரம் ,அதனை அடுத்து நுண்ணியதாய் தெறிவது அருந்ததி நட்சத்திரம் .இதனை மணமகள் தலைநிமிா்ந்து பார்ப்பது அருந்ததி பார்த்தல் என்பார்கள்.

மெட்டி அணிதல் : எதிாில் வரும் ஆண்கள் திருமணமானவர்கள் என்று பெண்கள் (அடுத்தவா்) அறிந்து கொள்ள ஆண்களுக்கு மெட்டி அணிவிப்பார்கள். (ஆண்களுக்கு மட்டுமே மெட்டி )


Thursday, 21 July 2016

சுகர் நாடியில் அரசியல் யோகம்

இராவியயும்புதனுஞ்சுகத்திலேயிருக்க
       விந்துவுஞ்சனியும்பத்திடத்தே
இருக்கிலக்கினத்திற்குனுறக்குருவங்
      கிசத்திலேசுக்கிரனிருக்கச்
சிரமிசையரசனிருக்கமாமதியஞ்
     சிறந்துபூரணவடிவடையத்
தீயர்சட்டாட்டவியத்திலேமறையச்
      செழித்துலகுதித்தசாதகவான்
அரசனாயுகமடிதொழப்பலநா
      ளாயுளோடிருந்துநாமகளும்
அலைகடல்மகளுந்தனதிடம்வாழ
      வன்னசத்திரம்பலநடத்தி
வரைபுரைதிருத்தோளிடைப்பிரதாப
     மாமகநண்டஞ்செயக்கனக
மணிமுடிசூடியரியணைமேவி
   மகத்துவம்பொருந்திவாழ்வானே   428
        சூரியனும்,புதனும் நாலில் இருக்க, வளர் பிறைச் சந்திரனும்,சனியும் கூடி பத்தில் இருக்க, லக்கினத்தில் செவ்வாய் இருக்க , குருவுக்கு 1-5-7-ல் சுக்கிரன் இருக்கவும் , பாவர்கள் 6-8-12-ல் இருக்கப் பெற்றவர்கள் .உலக பூகழ்  பெற்ற அரசனாக நீண்ட ஆயுளோடு தனம் தர்மஞ் செய்து மகத்துவம் பொருந்தி வாழ்வர்கள் .

தலையிறைநான்கினிறைநிதிறையித்
     தலைவர்கண்மூவரும்பாக்யத்
தலத்திலேநிலைத்துத்தசத்திறைதலைமேற்
       சரித்துநல்லேனார்களெல்லோரும்
மறையிலேகருணைத்திருக்கணோக்
கேற்றி
       மற்றவரற்றவராகி
வாய்ந்திடக்கண்டசாதகன்புவிக்கு
      மன்னவனேயென்பர்வல்லோர்
நிலையிறைவாபத்திறைநிதியிறையிந்
     நிருபர்ஊகண்மூவரும்பத்தி
னிற்கவத்தசத்தோனிலக்கினத்தலத்தே
     நேருறத்தீயவர்நோக்கந்
தொலைவுறநல்லோர்கரூணையாரமுதந்
      தோய்ந்துறக்கிடைத்தசாதகவான்
சுடர்முடிசூடியரியணையேறுந்
       துரகதகெசரததுரையே      429
       லக்கினாதிபதியும் ,4-ஆம் அதிபதியும் ,   9-ஆம் அதிபதியும்,மூவரும் கூடி 9-ல் இருக்க,10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க சுபர்கள் பார்க்கப்பட்டால் ஜாதகர் இப்பூமிக்கு அரசனாவார்கள்.
         லக்கினாதிபதியும்,9-ஆம் அதிபதியும், 11-ஆம் அதிபதியும் மூவரும் 10-ல் இருக்க , 10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க , இவரை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருக்க பிறந்த ஜாதகர் நவரத்தினம் பதித்த சிம்மாசனத்தில் அர்ந்து இப்பூமி முழுதும் அரசாள்வான்.

பண்ணவர்சாமிதானவர்சாமி
      பாக்கியசாமியிம்மூவர்
பரவறுகோணகேந்த்ரமாளிகையிற்
      பதிவுறவவ்வர்க்கவையே
திண்ணமாமாட்சியுச்சங்களாகச்
      சிறந்திடத்தீயவர்பார்வை
திகைக்கப்பாலொழியநல்லவர்கரணை
      செழித்திடக்கிடைத்தசாதகவான்
வண்ணமாமகுடஞ்சூடியிராச
       மாளிகையரியணைமேவி
மதகெசதுரகரதபதாதிகள்சூல
     வாழ்விடைத்தாழ்விலாதிருந்து
தெண்ணிலாவனையசத்ரசாமரபூ
       சிதையுறீஇவதைபுரியாது
செந்தனிப்பெருங்கோல்செலுத்துவா
னென்று
       செப்புவரொப்புவர்தீர்ந்தோர்     430

குருவும்,சுக்கிரனும்,9-ஆம் அதிபதியும் முவரும் தனித்தனியாக கேந்திர, கோணங்களில் ஆட்சி உச்சமாக இருக்க இவர்களை பாவர்கள் பார்கமால் இருக்க பெற்ற ஜாதகர் ரத்தின மகுடம் சூடி சிம்மாசனத்தில் அர்ந்து அரசள்வார்கள்

Friday, 15 July 2016

ராகு பகவான்

பால்                         ஆண்
குலம்                       அசுரகுலம்
கோத்திரம்          பைடீசனர்
சுபாவம்                  குரூரன்
பெற்றோர்           விப்ர சித்தி , சிம்மிகை
மனைவி                சிம்ஹி
ஆசனம்                  கொடி
வாகனம்               ஆடு
ஆடை                      கரும்மஞ்சள் சித்திரம்சம்பந்தமானது
தேவதை               பத்ரகாளி
அதிதேவதை   துர்கை அம்மன்
சமித்து                  அறுகு
தூபம்                      கடுகு
அம்சம்                    சித்திரகுப்தன்
வழிபாடு              கழுகு
சுவை                     புளிப்பு
சாப்படு                 இளஞ்சுடு
ரத்தினம்            கோமேதகம்
தானியம்            உளுந்து
மலர்                        கரு மந்தாரை
உலோகம்           கருங்கல்
குணம்                   தாமசம்
நிறம்                       கருப்பு
சமித்து                 அருகம்புல்
பறவை                அன்றில்
ஜாதி                       முஸ்லீம்
திசை                     தென்மேற்கு
ஐம் பூதம்            காற்று , நெருப்பு
பதவி                      ஏவலால்
உறவு                     இருவகைத் தாத்தா
கால்கள்              பலகால்கள்
நடை                       தவழ்வன
உருவம்                நெடியன்
உடல் பாகம்     குடல்,முடி,தலை,கைகள்
முகம்                      அழகில்லா முகம்,வாய்,உதடு, காது
உள்பாகம்          மலக்குடல்
உதயம்                  சிரோதயம்
நாடி                           பித்தநாடி
வடிவம்                   நீள் வடிவம்
இடம்                       தேவையற்ற பொருள்கள்
                                       வைக்குமிடம்,குடிசை வீடு
காலபலம்            பகலிரவு
மொழி                    அன்னிய மொழி
சாஸ்திரம்           வேதாந்தம்
நிலம்                       புற்றடுத்தநிலம்
பொருட்களில் மின்னக்கூடிய  பொருட்கள்
நட்சத்திரம்         திருவாதிரை , சுவாதி,சதயம்
நட்பு கிரகம்         புதன்,சுக்கிரன்,சனி,குரு
பகை கிரகம்      சூரியன்,சந்திரன்,செவ்வாய் , கேது
நட்பு ராசி                மிதுனம்,தனுசு,துலாம்
பகை ராசி             மேசம்,சிம்மம்,கும்பம்
ஆட்சி                        மிதுனம்
உச்சம்                       ரிசபம்
நீசம்                            விருச்சிகம்    

ஓம் லம் ஐம் கிலியும்  ராகுதேவாய நம

தினமும் காலை வேளையில் குளித் து விட்டு , சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் ராகு பகவான் நலம் தருவர்.

ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்தோராஹீ :ப்ரசோதயாத்
      மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ, இருபத்தேழு முறையோ உள்ளார்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் , ராகு பகவான் மிகவும் மகிழ்ந்து யோக பாக்கியங்கள் அதிகாிக்கும் மற்றும் எல்லா வளங்களையும் அருள்வார்.

தலங்கள்

சென்னை குன்றத்தூர்
அருமிகு நாகேஸ்வரர் கோயில்      

திருநாகேஸ்வரம்
கும்பகோணம் - காரைகால்

கதிராமங்கலம்
துர்க்கை அம்மன் கோயில்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து
3- கி மீ

நாகர்கோவில்
கன்னியாகுமாியிலிருந்து 10 -கி மீ

ப.சூரியஜெயவேல்
9600607603

   


Sunday, 10 July 2016

சந்திர பகவான் 9600607603

சந்திர பகவான் 


பால்                            பெண்
பெற்றோர்             அத்திாி முனிவா்
மனைவி                  ரோகிணி
மகன்                           புதன்
தேவதை                   பார்வதி
வழிபாடு                   சாம்பிராணி
ஜாதி                            வைசியன்
திசை                           வடமேற்கு
பதவி                          அரசி
ஆசனம்                   சவுக்கம்
சமித்து                     முருங்கை
வாகனம்                  முத்துவிமனம்
குணம்                      சத்வீகம்
உலோகம்              வெண்கலம் , ஈயெம்
தனியம்                    நெல்
மலர்                            வெள்ளலாி
சுவை                          இனிப்பு
ரத்தினம்                  முத்து
நிறம்                           வெள்ளை
பறவை                     ஆந்தை
உறவு                          தாய் , மாமி ,
                                          மூத்தசகோதாி
இடம்                           குளிர்சாதனம் ,
                                         குளியல் அறை
நாடி                             சிலேத்தும்
சுபவம்                       வளர்பிறை செளமீயன்
                                         தேய்பிறை குரூரன்
குலம்                           சந்திரகுலம்
கோத்திரம்             ஆத்திரேயர்
முகபாகம்               இடது கண்
உடல் பாகம்          வயிறு , மார்பகம் ,
                                         சிறுநீரகம் , வட்டமுகம்
உருவம்                     குள்ளம்
உடல்உள் பாகம் ரத்தம்
நடை                             தவழ்வன (சுழல்வன)
நாடி                                சிலேத்மம்
வடிவம்                          குருகியவட்ட வடிவம்
ஜாதி ,                            குணம் பிராமணன் , சத்வீகம்
குலம்                               சந்திர குலம்
ஐயம் பூதம்                அப்பு (நீர் )
கோத்திரம்                ஆத்திரேயர்
திசை                                தென்கிழக்கு
நவத்துவராம்          இடது மூககு
காலபலம்                   இரவு
மொழி                            தமிழ் இலக்கணம்
நிலம்                               நீாடுத்த நிலம்
கால்                                  பலகால்கள்
நட்பு                                   சூரியன்,செவ்வாய்,குரு
பகைவர்கள்              புதன்,சனி,ராகு,கேது
ஆட்சி                                கடகம்
உச்சம்                               ரிசபம் 3 '
நீச்சம்                                விருச்சிகம் 3 '
நட்பு ராசி                        மிதுனம்,சிம்மம்,கன்னி
பகைராசி                       துலாம்,கும்பம்
திருத்தலங்கங்கள்
திங்களூர் கும்பகோணம் 30 - கி மீ
                                திருவையாறு 4 - கி மீ
                                தஞ்சாவூா் 16 - கி மீ

சென்னை சோமங்கலம்
அருள்மிகு சோமநாதீஸ்வரர் கோயில்
திருமாந்துறை
அருளமிகு யோக நாயகி சமேத
திரு அஷ்யநாத சுவாமி திருக்கோயில்

திருவிடைமருதூர்

ஓம் உம் சிவாய சந்திரதேவாய நம
     மன நிலை பதிப்புள்ளவர்கள் , மனச்சுமையுள்ளவர்கள் . இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.காலை வேளையில் குளித்து முடித்த பின் இந்த மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சாிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள் .

சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேமரூபாய திமஹி !
தன்னோ ஸோம : பிரசோதயாத்
                          தினமும்108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு ,ஒருவேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாது இந்த காயத்ரி மந்திரத்தை உச்சாித்தால் நலம் அடையலாம் .

ப.சூரியஜெயவேல்

9600607603

Saturday, 25 June 2016

புத பகவான் ப.சூரியஜெயவேல் 9600607603

புத பகவான் 

பால் பெண்
பெற்றோா் சந்திரன் , தாரை
மனைவியா் இனை (ஞானதேவி)
மகன்கள் புரூரவா,அா்த்தபிரகரணன்
கிழமை புதன் கிழமை
அதிதேவதை மகாவிஷ்ணு
பிரத்யதி தேவதை நாராயணன்
வாகனம் குதிரை
அமசம் வித்தியாகாரன்
தானியம் பச்சைப்பயறு
மலா் வெண்காந்தள்
வஸ்திரம் பச்சை நிற ஆடை
ரத்தினம் மரகதம்
சமித்து நாயுருவி
உலோகம் பித்தளை
நிவேதனம் பாசிப் பருப்பு அன்னம்
ஆசனம் அம்பு
குணம் தாமசம்
சுவை உப்பு
பறவை கிச்சிலி
வழிபாடு மதுரை சொக்கா்
ஜாதி வைசியா்
தத்துவம் காற்று
பதவி இளவரசன்
உறவுகள் தாய்மாமன் , நண்பன்
                                 இளைய உடன்பிறப்பு உடல் பாகம் கைகள், தோள்பட்டை
                                தோல்,நெற்றி , மூக்கு
                                நாக்கு , கழுத்து
உள் உடல் பாகம் தொண்டை , நரம்பு
நாேய் தேமல் , வாதம்
இடம் வரவேற்பறை,மரவீடு
ஆட்சிவீடு மிதுனம் , கன்னி
உச்ச வீடு கன்னி 15
நீச்ச வீடு மீனம் 15
நட்பு வீடு ரிசபம் , சிம்மம் ,
                                துலாம் ,
பகை வீடு மேசம் , கடகம் ,
                               விருச்சிகம் , தனுசு ,
நட்பு கிரகம் சூாியன் , சுக்கிரன்
                                சனி , ராகு
பகை கிரகம் சந்திரன் , குரு
                                செவ்வாய் , கேது
நட்சத்திரங்கள் ஆயில்யம் ,
                                   கேட்டை , ரேவதி    
புதனின் மூல மந்திரம்
ஓம் புதாய நம
கல்வி கற்க்கும் மாணவ/மாணவிகள் அவசியம் இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் .காலை வேளையில் குளித்து முடித்த பின் மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லலுங்கள் .அபார ஞானம் கிட்டும் .

புதனின் காயத்ரி மந்திரம்
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
                           தினமும் 108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு , ஒரு வேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாவது மந்திரத்தை உச்சரிக்கவும் , எத்தனை முறை உச்சரிக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் உச்சரிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம் .
வழிபடும் தலங்கள்            
திருவெண்காடு
மதுரை சிம்மக்கல் ஆதிசொக்கநாதா்
காஞ்சீபுரம் கிழக்கே 4 1/2 கி மீ
 பச்சை வண்ணத் திருக்கோவில்
சென்னை போரூா் , சைதாப்பேட்டை உள்ள அருள் மிகு காரணீஸ்வரா்
குன்றத்தூா் சாலையில் உள்ள கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில்
திருநெல்வேலி அருகில் தென்திருப்பேரை
காஞ்சிக்கு அருகில் கச்சிநெறிக்காரைகாடு (திருக்காலிமேடு)

ப.சூாியஜெயவேல்
9600607603